/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
ADDED : ஆக 24, 2024 09:48 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், துாய்மை பணியாளர்களுக்கான நலவாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், துாய்மை பணியாளர்களுக்கு, குடிநீர், கழிப்பறை, ஓய்வெடுக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் செய்துதர வேண்டும்.
துாய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால், விஷாகா கமிட்டி மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில், வீடு வழங்கலம்.
தாட்கோ மூலம், கடனுதவிகள் பெற்றுத்தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார். மேலும், தாட்கோ சார்பில், 10 துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப்- - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.