/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சி - மாமல்லை அரசு பஸ் இயக்கம்
/
காஞ்சி - மாமல்லை அரசு பஸ் இயக்கம்
ADDED : ஆக 14, 2024 08:45 PM
மாமல்லபுரம்,:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் சிற்பங்களை காண, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், காஞ்சிபுரம், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று திரும்புகின்றனர்.
பயணியர் போக்குவரத்திற்காக, காஞ்சிபுரம் - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 212ஏ, மாமல்லபுரம் - திருப்பதி இடையே, தடம் எண் 212எச் ஆகிய அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பயணியர் குறைவாக இருந்த காலத்தில் இயக்கப்பட்ட அவை, பயணியர் பெருகிய காலத்தில் இயக்கப்படாமல், 10 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டன. மாமல்லபுரம் பகுதியினர், செங்கல்பட்டு வரை ஒரு பேருந்திலும், அங்கிருந்து காஞ்சிபுரம், திருப்பதி பகுதிகளுக்கு வேறு பேருந்திலும் சென்று சிரமப்பட்டனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, காஞ்சிபுரம் - மாமல்லபுரம் இடையே, மீண்டும் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில், காலை 5:30 மணி, காலை 10:40 மணி, மாலை 4:00 மணி ஆகிய நேரங்களில் பேருந்து புறப்படுகிறது.
மாமல்லபுரத்தில், காலை 8:05 மணி, பகல் 1:20 மணி, மாலை 6:40 மணி ஆகிய நேரங்களில் புறப்படுகிறது.