/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சி குமரகோட்டம் கோவில் ராஜகோபுர திருப்பணி துவக்கம்
/
காஞ்சி குமரகோட்டம் கோவில் ராஜகோபுர திருப்பணி துவக்கம்
காஞ்சி குமரகோட்டம் கோவில் ராஜகோபுர திருப்பணி துவக்கம்
காஞ்சி குமரகோட்டம் கோவில் ராஜகோபுர திருப்பணி துவக்கம்
ADDED : ஜூலை 17, 2024 01:01 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் சன்னிதி தவிர்த்து, ராஜகோபுரம்மற்றும் உட்பிரகார சன்னிதிகளை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, உட்பிரகார சன்னிதி மற்றும் ராஜகோபுரம் திருப்பணி துவக்குவதற்கான பாலாலயம் கோவில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாரியார் கே.ஆர்.காமேஸ்வர குருக்கள் தலைமையில் கடந்த பிப்., 26ல் நடந்தது.
பாலாலயம் நடந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும் திருப்பணி துவக்கப்படாமல் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் காலம் தாழ்த்திவந்தனர். இதனால், திருப் பணியை விரைவில் துவக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கோவில் நிர்வாகம், திருப்பணியை துவக்க தீவிரம் காட்டியுள்ளது.
திருப்பணியில் முதற்கட்டமாக கோவில் ராஜகோபுரம் 14.90 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் திருப்பணி துவங்க உள்ளது. இதையொட்டி கோபுரத்திற்கு சவுக்கு கம்புகளால் சாரம் அமைக்கும் பணி நேற்று நடந்தது.
ராஜகோபுரம் திருப்பணியை தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் உள்ள பிற சன்னிதிகளில் திருப்பணியை விரைவில் துவக்கும் வகையில், மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.