/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீழவலம்பேட்டை நிழற்குடை பராமரிப்பின்றி பாழ்
/
கீழவலம்பேட்டை நிழற்குடை பராமரிப்பின்றி பாழ்
ADDED : ஜூலை 27, 2024 01:23 AM

மதுராந்தகம், :மதுராந்தகம் அடுத்த கீழவலம்பேட்டையில் உள்ள பயணியர் நிழற்குடையில், இருக்கைகள் சேதம் அடைந்தும், தரைப்பகுதிகளில் விரிசல் ஏற்பட்டும், மோசமான நிலையில் உள்ளது.
மதுராந்தகம் அடுத்த கக்கிலப்பேட்டை வழியாக, திருக்கழுக்குன்றம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையோரம் உள்ள கீழவலம்பேட்டையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 2018- - 19ல், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
தற்போது, பயணியர் நிழற்குடையில் உள்ள இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், நிழற்குடை சுவரில் மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. அதனால், நிழற்குடையின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, நிழற்குடையைச் சுற்றி புதர்கள் மண்டியுள்ளன. தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாதவாறு உள்ளது.
எனவே, சேதமடைந்த இருக்கைகளை அப்புறப்படுத்தி, புதிதாக இருக்கைகள் அமைக்கவும், விரிசல்களை சீரமைத்து பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.