/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கத்தியை காட்டி மிரட்டிய மனநோயாளி அட்மிட்
/
கத்தியை காட்டி மிரட்டிய மனநோயாளி அட்மிட்
ADDED : ஜூலை 18, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதியை சேர்ந்த ஒருவர், கத்தியை காட்டி மிரட்டுவது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
இதுதொடர்பாக, கேளம்பாக்கம் போலீசார், நேற்று அப்பகுதிக்கு சென்று விசாரணை செய்தனர். அதில், அந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், அருகே வசிப்பவர்களுக்கு அவர் இடையூறு ஏற்படுத்தி வருவதும் தெரியவந்தது.
பின், போலீசார் அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்குமாறு, அவரின் குடும்பத்தினரிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.