/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவு நீரில் மிதக்கும் கொண்டமங்கலம் குடியிருப்புகள் அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர்பலி அபாயம்
/
கழிவு நீரில் மிதக்கும் கொண்டமங்கலம் குடியிருப்புகள் அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர்பலி அபாயம்
கழிவு நீரில் மிதக்கும் கொண்டமங்கலம் குடியிருப்புகள் அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர்பலி அபாயம்
கழிவு நீரில் மிதக்கும் கொண்டமங்கலம் குடியிருப்புகள் அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர்பலி அபாயம்
ADDED : ஆக 23, 2024 11:51 PM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் கோவிந்தாபுரம் -- அனுமந்தபுரம் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் இருபுறமும் மழைநீர் செல்ல வழி இல்லாததால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும், சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த பகுதியில் மழை நீர் செல்லும் கால்வாயை பலர் ஆக்கிரமிப்பு செய்து, மாட்டு சாணம் கொட்டியுள்ளனர். இதன் காரணமாக, தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீரோடு கலந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும், இந்த கால்வாய் அடியில் மின்வாரிய அதிகாரிகள் 11 கே.வி. புதை மின்வடம் மூலம் மின்சாரம் செல்கிறது.
எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளதால், கிராம மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 3.85 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் இருபுறமும் தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
இணைப்பு கால்வாய் இல்லாத இடத்தில், அதிகாரிகள் தங்களின் சுய லாபத்திற்காக புதிய கால்வாய் அமைத்து உள்ளனர். கழிவு நீர் தேங்குவது குறித்து பலமுறை காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை இல்லை.
எனவே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லையெனில், விரைவில் கிராம மக்களை திரட்டி அனுமந்தபுரம் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டெங்கு காய்ச்சல் பரவுதலை தடுக்க, ஒவ்வொரு ஆண்டும் வீடு வீடாக வந்து அரசு ஊழியர்கள் சோதனை நடத்துகின்றனர். எங்கள் கிராமமே கழிவு நீரில் மூழ்கி உள்ளது. இதற்கு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை.
மு.முத்தமிழ் செல்வன்,
கொண்டமங்கலம்.