/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீழே கிடந்த தங்க செயினை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
/
கீழே கிடந்த தங்க செயினை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
ADDED : ஆக 20, 2024 08:15 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், 58. நேற்று நண்பகல், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க்கிற்கு, தன் உறவினருடன் சென்றார்.
அப்போது, வங்கி வளாகத்தில் தங்க செயின் ஒன்று கீழே கிடந்தது. அதை எடுத்த வேலாயுதம், நீண்ட நேரம் அப்பகுதியிலேயே, அதன் உரிமையாளரின் வருகைக்காக காத்திருந்தார்.
ஆனால், யாரும் வராததால், 1.5 சவரன் மதிப்பு உடைய தங்க செயினை, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில், வேலாயுதம் ஒப்படைத்தார்.
போலீசார் வேலாயுதத்தின் நேர்மையை பாராட்டினர். தொடர்ந்து, செயின் காணவில்லை என புகார் ஏதேனும் வந்துள்ளதா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

