/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பாக்கம் துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
செம்பாக்கம் துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
செம்பாக்கம் துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
செம்பாக்கம் துர்க்கை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 07, 2024 10:58 PM

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் துர்க்கை அம்மன் கோவிலில், திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 5ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
தொடர்ந்து, மஹா கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது.
கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, யாக சாலை பூஜை, கோ பூஜை, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, கலச புறப்பாடு நடந்தது. பின், காலை 8:30 மணி அளவில், கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.