/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று மைலை ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்
/
இன்று மைலை ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 03, 2024 12:27 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மைலை கிராமத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவில் வளாகத்தில் உள்ள வீர ஆஞ் நேயர், செல்வ விநாயகர், பாலமுருகன், பால் முனீஸ்வரர், அய்யப்பன் ஆகிய சுவாமிகளின் மூலஸ்தான கோபுரத்துடன் கூடிய திருப்பணி வேலைகள் நடந்தன.
பூர்வாங்க பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இன்று காலை 6:00 மணிக்கு, யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வருகின்றன. தொடர்ந்து, மூலஸ்தான கோபுரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துஉள்ளனர்.