ADDED : மார் 05, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூரில் மாசி பிரம்மோத்சவ பெருவிழாவில் முதல் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு கிளி வாகனத்தில் கந்தபெருமான் வீதி உலா வந்தார்.
திருப்போரூர்கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோத்சவ பெருவிழா நேற்று முன்தினம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு உத்சவம் நடைபெறுகிறது. முதல் நாள் உத்சவமான நேற்று முன்தினம் இரவு கந்தபெருமான் கிளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
முக்கிய விழாவான தேர்திருவிழா வரும் 9ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை, 9:00 மணிக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.