/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் வருகை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பராமரிப்பு
/
முதல்வர் வருகை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பராமரிப்பு
முதல்வர் வருகை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பராமரிப்பு
முதல்வர் வருகை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் பராமரிப்பு
ADDED : மார் 07, 2025 01:33 AM

திருக்கழுக்குன்றம்:முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, திருக்கழுக்குன்றம் பகுதி பராமரிக்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின், அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள், துறைகளின் செயல்பாடுகள் குறித்து, மாவட்டந்தோறும் ஆய்வு செய்கிறார்.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் 11ம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாள் இரவு, மாமல்லபுரம் தனியார் கடற்கரை விடுதியில் தங்கி, திருக்கழுக்குன்றம் வழியாக, செங்கல்பட்டு செல்வதாக கூறப்படுகிறது.
அன்று காலை, திருக்கழுக்குன்றத்தில் நடைபயணமாக சென்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதாகவும், தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, நடைபயண பகுதியில் உள்ள தெருவிளக்கு கம்பங்களில், பேரூராட்சித் தலைவர் யுவராஜ் மேற்பார்வையில், புதிய மின்விளக்குகள் பொருத்தப்படுகின்றன.