/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ முகாம்
/
கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ முகாம்
ADDED : ஆக 05, 2024 11:56 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்களை தேடி மருத்துவ முகாம் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் தாய்ப்பால் வார விழாவையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
அதில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, தொற்றாநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
இம்முகாமை, கலெக்டர்அருண்ராஜ் துவக்கி வைத்தார். இதில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பரணிதரன், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதன்பின், தாய்ப்பால் ஊட்டுதலின் இன்றியமையாமை குறித்து விழிப்புணர்வு ஏற்பத்தும் வகையில் வரையப்பட்ட கோலத்தை, கலெக்டர் பார்வையிட்டு, மூன்று செவிலியர்களுக்கு, கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.