/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் வாரிய பிரச்னைகளுக்கு தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
/
மின் வாரிய பிரச்னைகளுக்கு தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
மின் வாரிய பிரச்னைகளுக்கு தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
மின் வாரிய பிரச்னைகளுக்கு தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : ஆக 15, 2024 07:59 PM
செங்கல்பட்டு:மின் அழுத்த குறைபாடு, சேதமான மின் கம்பங்களை மழைக்காலத்திற்குள் சீரமைக்க வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகளுக்கு, அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், உள்ளாட்சி பிரதிகளுடன் கலந்துரையாடி, பொமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, வல்லம், மேலமையூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், மின் கம்பம் உடையும் நிலையில் உள்ளன. அவற்றை, மின்வாரிய அதிகாரிகள் மாற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.
மாவட்டத்தில், கிராமப்புறங்களில் மின் அழுத்த குறைபாடு தொடர்வதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். அதன்பின், வடகிழக்கு பருவ மழைக்குள், மின்கம்பம் மாற்றம், மின் அழுத்த குறைபாடுகளுக்கு, மின்வாரிய அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், இலவச வீட்டுமனை, மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 249 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் அன்பரசன் உத்தரவிட்டார். கலெக்டர் அருண்ராஜ், எஸ்.பி., சாய் பிரணீத் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.