/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மொபைல் போன் பறிப்பு; நான்கு வாலிபர்கள் கைது
/
மொபைல் போன் பறிப்பு; நான்கு வாலிபர்கள் கைது
ADDED : ஜூலை 28, 2024 11:42 PM
மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 21. கடந்த 20ம் தேதி இரவு, கீழக்கரணை பகுதியில் நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் நான்கு பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, நந்தகுமாரிடமிருந்து மொபைல் போனை பறித்துச் சென்றது.
இது குறித்து, நந்தகுமார் மறைமலை நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட, சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக், 22, மகேந்திரா சிட்டி பகுதியை சேர்ந்த யோகேஷ்வரன், 24, ஆகியோரை, கடந்த 23ம் தேதி கைது செய்தனர்.
இருவரிடமும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கார்த்திக்கின் நண்பர்களான திருத்தேரி பகுதியை சேர்ந்த தனுஷ்குமார், 19, மற்றும் அவரது நண்பரான சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பார்த்திபன், 27, உள்ளிட்டோரையும் கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.