ADDED : ஜூலை 26, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ், 29. மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, பாரதி நகர் அருகில் சங்கர் கணேஷை வழிமறித்த இருவர், அவரை அடித்து மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
இது குறித்து, சங்கர் கணேஷ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.