/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி; மகளிர் கைப்பந்தில் 'சாம்பியன்'
/
எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி; மகளிர் கைப்பந்தில் 'சாம்பியன்'
எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி; மகளிர் கைப்பந்தில் 'சாம்பியன்'
எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி; மகளிர் கைப்பந்தில் 'சாம்பியன்'
ADDED : ஆக 19, 2024 12:18 AM

சென்னை : சென்னை, அம்பத்துார், மாதனாங்குப்பத்தில் உள்ள சோகா இகேடா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டி, கடந்த 16, 17 ஆகிய இரு நாட்கள் நடந்தன.
இதில், பெண்கள் கிறிஸ்தவ கல்லுாரி, எம்.ஓ.பி., வைஷ்ணவ், அன்னை வயலட், அன்னை வேளாங்கண்ணி, செயின்ட் ஆன்ஸ், செவாலியர் தாமஸ் எலிசபெத், இந்துஸ்தான், சிந்தி, பாரதி, சோகா இகேடா, நாசரேத், ஸ்ரீ கிருஷ்ணசாமி உள்ளிட்ட 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
போட்டியின் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி அணியினர், அரையிறுதி ஆட்டத்தில் நாசரேத் கல்லுாரி அணியை 25 - -15, 25 - -15 என்ற நேர் செட் கணக்கில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், அன்னை வேளாங்கண்ணி கல்லுாரி அணியை எதிர்த்து ஆடிய எம்.ஓ.பி., கல்லுாரி அணி வீராங்கனையர், முதல் செட் ஆட்டத்தை 28 - -23 என, போராடி வென்றனர்.
அடுத்த செட்டை 25 - -19 என வென்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றினர்.
அன்னை வேளாங்கண்ணி, நாசரேத், சோகா இகேடா கல்லுாரிகள் முறையே, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின.

