/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாய் வசதி இல்லாததால் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி
/
கால்வாய் வசதி இல்லாததால் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி
கால்வாய் வசதி இல்லாததால் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி
கால்வாய் வசதி இல்லாததால் தேங்கிய நீரில் கொசு உற்பத்தி
ADDED : ஆக 23, 2024 01:01 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, பிரியா நகர் பகுதியில் அபிராம் நகர், வைகை நகர் உள்ளது. இங்கு 400 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெரு சாலையில் தேங்கி,துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லை மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து, அப்பகுதி வாசிகள் தெரிவித்ததாவது.
ஊரப்பாக்கம் ஊராட்சி, அபிராம் நகர் மற்றும் வைகை நகர் பகுதியில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றோம். இங்கு நாங்கள் 20 வது ஆண்டுகளுக்கு மேலாக, வசித்து வருகிறோம்.
இப்பகுதிக்கு, கழிவுநீர் கால்வாய், குடிநீர், மழைநீர் வடிகால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. ஏற்படுத்தி தர வேண்டி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும்.
இதுவரை எந்தவிதமான, நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கடந்த சில நாட்களாக, பெய்த மழை தெருவில் உள்ள, காலி மனைகளில் மழை நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன்,
கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம். எங்கள் பகுதிக்கு, கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைத்து,
இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் சீராக, செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.