/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொலம்பாக்கம் ஊராட்சியில் கொசு உற்பத்தி 'அமோகம்'
/
பொலம்பாக்கம் ஊராட்சியில் கொசு உற்பத்தி 'அமோகம்'
ADDED : செப் 15, 2024 02:18 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் திரவுபதி அம்மன் கோவில் அருகே, அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இதில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 150க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
பள்ளி எதிரே கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாய ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் வாயிலகா அதிகளவில் கொசு உற்பத்தியாவதாக கூறப்படுகிறது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி எதிரே கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.