/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 வயது குழந்தையுடன் தாய் மாயம்
/
3 வயது குழந்தையுடன் தாய் மாயம்
ADDED : ஏப் 30, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே உள்ள மொரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோதி மனைவி சரஸ்வதி, 28. இவர்களுக்கு அகிலா, 3, என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த 24-ம் தேதி, தோழி வீட்டு விசேஷத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு, பெண் குழந்தையை உடன் அழைத்துக் கொண்டு, சரஸ்வதி சென்றுள்ளார்.
இந்நிலையில், சரஸ்வதி மீண்டும் வீடு திரும்பாததால், அவரின் கணவர் ஜோதி, மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போன தாய் மற்றும் பெண் குழந்தையை தேடி வருகின்றனர்.