/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 04, 2024 10:36 PM

சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த கடுக்கலுார் கிராமத்தில், வில்லிப்பாக்கம் -- செய்யூர் செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் பருவ மழையின் போது, சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும்.
எனவே, நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு சிறு பாலங்கள் மற்றும் சாலை தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ஜல்லி, மணல் மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ளதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.