/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நல்லாமூர் சுகாதார நிலையத்திற்கு ரூ.1.23 கோடியில் புது கட்டடம்
/
நல்லாமூர் சுகாதார நிலையத்திற்கு ரூ.1.23 கோடியில் புது கட்டடம்
நல்லாமூர் சுகாதார நிலையத்திற்கு ரூ.1.23 கோடியில் புது கட்டடம்
நல்லாமூர் சுகாதார நிலையத்திற்கு ரூ.1.23 கோடியில் புது கட்டடம்
ADDED : பிப் 24, 2025 11:30 PM

சித்தாமூர்,செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அருகே நல்லாமூர் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
கொளத்துார், கோட்டிவாக்கம், நல்லாமூர், கீழ்கரணை என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, பிரதான அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணியர் என, நுாற்றுக்கணக்கான புறநோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, பழைய கட்டடத்தில் தற்போது இயங்குகிறது.
போதிய இடவசதி இல்லாததால், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 1.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,050 சதுர அடி பரப்பளவில், புறநோயாளிகளுக்கு புதிய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் துவங்கப்பட்டன.
கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், அடுத்த சில வாரங்களில் கட்டுமானப் பணிகள் முழுதும் முடிந்து,மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.