/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் கட்டணத்திற்கு ரசீது இல்லை நுகர்வோர் கடும் அதிருப்தி
/
மின் கட்டணத்திற்கு ரசீது இல்லை நுகர்வோர் கடும் அதிருப்தி
மின் கட்டணத்திற்கு ரசீது இல்லை நுகர்வோர் கடும் அதிருப்தி
மின் கட்டணத்திற்கு ரசீது இல்லை நுகர்வோர் கடும் அதிருப்தி
ADDED : ஏப் 17, 2024 09:00 PM
செங்குன்றம்,:மின் கட்டணம்செலுத்தியதற்கு ஆதாரமாக வழங்கப்படும், 'பே- ரிசிப்ட்' எனப்படும் ரசீது வழங்கப்படாததால், நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை, செங்குன்றம் மின் வாரிய அலுவலகத்தில், கடந்த 15ம் தேதி முதல், மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு, அதற்கான ரசீது வழங்காமல், மின் பயனீட்டு விபர அட்டையில் எழுதிக் கொடுக்கின்றனர்.
கடை, ஹோட்டல் உள்ளிட்ட தனியார்நிறுவனங்களுக்கானகட்டணம் செலுத்தும் ஊழியர்கள், பணம் செலுத்தியதற்கான ரசீது இல்லாததால், தங்கள் முதலாளிகளின் விசாரணைக்கு ஆளாகநேரிடுகிறது.
அங்குள்ள மின் வாரிய அலுவலர்களோ, 'பே- ரிசிப்ட்'டுக்கான 'பேப்பர் ரோல்' இருப்பு இல்லை. மேலும், 'பிரின்டிங்' இயந்திரமும் பழுதாகி உள்ளதாக கூறுகின்றனர்.
மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்யாமல், மின் வாரியம் நுகர்வோரை அலட்சியப்படுத்துவதால், நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நுகர்வோர் கூறியதாவது:
செங்குன்றம் சுற்றுவட்டாரங்களில், முறையாக 'ரீடிங்' எடுக்கப் படுவதில்லை. ஒரு மாதம் மின் கட்டணம் செலுத்த தவறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், இரண்டாவது மாதமும் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. அதன் பின், மூன்றாவது முறை மின் கட்டணம் செலுத்தும் போது, யூனிட்டுக்கு 22 ரூபாய்அபராதம் என,மொத்தமாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால், முதல் இரண்டு மாதமும், மின் கட்டண பதிவேட்டில் கட்டணம் செலுத்தாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படுகிறது.
அதனால், நுகர்வோர் மின் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி, அதற்கான அபராதமாக, 2,000 ரூபாயும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. மின் இணைப்பு பயன்படுத்தாத பல வீடுகளின் உரிமையாளர்களிடம், இதுபோல், 'முறைகேடாக' அபராத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

