/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீரழிந்த நிலையில் இருளர் வீடுகள் வாயலுாரில் அதிகாரிகள் ஆய்வு
/
சீரழிந்த நிலையில் இருளர் வீடுகள் வாயலுாரில் அதிகாரிகள் ஆய்வு
சீரழிந்த நிலையில் இருளர் வீடுகள் வாயலுாரில் அதிகாரிகள் ஆய்வு
சீரழிந்த நிலையில் இருளர் வீடுகள் வாயலுாரில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 10, 2024 01:41 AM
புதுப்பட்டினம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் காரைத்திட்டு பகுதியில், இருளர்கள் வசிக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், அவர்களுக்காக கட்டப்பட்ட 36 வீடுகள் சீரழிந்து, இடியும் அபாயத்தில் உள்ளன.
வீடற்றவர்களுக்காக, ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட 17 வீடுகளுக்கும், மின் இணைப்பும் பெறப்படவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில், மே 6ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, சப் - கலெக்டர் நாராயணசர்மா, திருக்கழுக்குன்றம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, திருக்கழுக்குன்றம் தாசில்தார் சார்பில், மண்டல துணை தாசில்தார் சத்யா, ஊரக வளர்ச்சி துறையினருடன், நேற்று முன்தினம் இருளர் வீடுகளை பார்வையிட்டு, சீரழிவு நிலைமையை ஆய்வு செய்து, குறைகள் கேட்டறிந்தார்.
மேலும், புதுப்பட்டினம் குப்பம், உய்யாலி குப்பம் மீனவர் பகுதிகளுக்கு, பகிங்ஹாம் கால்வாயை கடந்து செல்லும் நிலை இருப்பதால், அங்கு பாலம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.