/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் துாக்கத்தில் துறை அதிகாரிகள்
/
நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் துாக்கத்தில் துறை அதிகாரிகள்
நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் துாக்கத்தில் துறை அதிகாரிகள்
நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ் துாக்கத்தில் துறை அதிகாரிகள்
ADDED : ஜூன் 29, 2024 10:00 PM
திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர்- - கேளம்பாக்கம் இடையே இளவந்தாங்கள் கிராமத்தில், மோகனா மஹால் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த நிறுத்தம் வழியாக தாம்பரம், தி.நகர், பிராட்வே, கிளாம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன. இந்த நிறுத்தத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு, இப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர்.
இவ்வழி தடத்தில் செல்லும் பெரும்பாலான அரசு பேருந்துகள், இந்த நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதாக, பயணியர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அனுப்பியும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பகுதி வாசிகள் கூறியதாவது:
மோகனா மஹால் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால், கடும் சிரமப்பட்டு வருகிறோம். பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து புகார் மனுவும் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.