/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
/
சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
ADDED : செப் 05, 2024 06:59 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரகுமார், 54.
இவர், நேற்று எக்ஸெல் இருசக்கர வாகனத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிறுபாக்கத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றார்.
அப்போது, தொழுப்பேடு பகுதியில், பின்னால் அதிவேகமாக வந்த ஈச்சர் வாகனம், ரவீந்திரகுமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், ரவீந்திரகுமாரின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான, ஈச்சர் சரக்கு வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.