/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆம்னி பேருந்து பயணி நெஞ்சுவலியால் உயிரிழப்பு
/
ஆம்னி பேருந்து பயணி நெஞ்சுவலியால் உயிரிழப்பு
ADDED : ஆக 15, 2024 08:23 PM
கூடுவாஞ்சேரி:சென்னை கோயம்பேட்டில் இருந்து கோயம்புத்துாருக்கு, நேற்று முன்தினம் இரவு, ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், கோயம்புத்துார் மாவட்டம், கூடலுார் லவ்லி தெருவைச் சேர்ந்த இளமாறன், 57, என்பவர், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து பயணம் செய்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில் பேருந்து வந்த போது, இளமாறனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இளமாறனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கூடுவாஞ்சேரி போலீசார் இளமாறன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

