ADDED : செப் 07, 2024 07:23 PM
மதுராந்தகம்:விருதுநகர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 54. இவர், படாளம் பகுதியில் தங்கி இருந்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலை சீரமைப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு பணி முடிந்து, படாளம் லாரி பார்க்கிங் அருகே உள்ள, அத்திமனம் கூட்டுசாலை பகுதிக்கு நடந்து சென்று, அங்கு உள்ள கடையில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு,
சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த, தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மோதியதில், சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும். சம்பவ இடத்திற்கு, விரைந்து வந்த படாளம் போலீசார்,
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து, மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்ற தனியார் ஆம்னி பேருந்தை,
அங்கு பொருத்தியுள்ள,
சிசிடிவி கேமரா காட்சிகள் வாயிலாக, அடையாளம் கண்டு, படாளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.