ADDED : ஆக 25, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்: சென்னை மிண்ட் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன், 32; நேற்று மாலை குடும்பத்துடன் திண்டிவனம் நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில், 'இன்னோவா' காரில் சென்று கொண்டிருந்தார்.
பரனூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றபோது பரனூர் சாலை சந்திப்பை கடக்க முயன்ற 'ஹோண்டா ஷயின்' பைக் மீது கார் மோதியது.
இதில் பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, 'இன்னோவா' காரை ஓட்டி வந்த பாலசந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து அவரது மொபைல் போனை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

