/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனு கொடுக்கும் போராட்டம் 'போஸ்டர்' ஒட்டி அறிவிப்பு
/
மனு கொடுக்கும் போராட்டம் 'போஸ்டர்' ஒட்டி அறிவிப்பு
மனு கொடுக்கும் போராட்டம் 'போஸ்டர்' ஒட்டி அறிவிப்பு
மனு கொடுக்கும் போராட்டம் 'போஸ்டர்' ஒட்டி அறிவிப்பு
ADDED : மே 28, 2024 11:33 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில், மாநகர போக்குவரத்து கழக ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்கள் சார்ந்த, 1,500 மனை பிரிவு உள்ளது.
இதில், யாரும் வீடு கட்டி குடியேறவில்லை. முதற்கட்டமாக, அங்கு மாநகர போக்குவரத்து கழக ஹவுசிங் சொசைட்டி உறுப்பினர்கள் நலச்சங்க கட்டடம் கட்ட உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு மின் இணைப்பு கேட்டு, கேளம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என, சங்கத்தின் சார்பில் திருப்போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்கண்டன போஸ்டர்ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளவிபரம்:
கேளம்பாக்கம் மின் வாரிய உதவி பொறியாளரே, மின் இணைப்பு கோரி விண்ணப்பம் அளித்து, 6 மாதம்ஆகிறது.
உடனடியாக மின் இணைப்பு வழங்ககோரி, வரும் 1ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு, கேளம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டர், பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால், திருப் போரூரில் பரபரப்பு நிலவிவருகிறது.