/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ
ADDED : ஆக 07, 2024 09:58 PM
மேல்மருவத்துார்:கடலூர் மாவட்டம், கோனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ், 23. இவர், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
அவர்கள் இருவரும், கடந்த மார்ச் மாதம், வீட்டை விட்டு வெளியேறி, அச்சிறுபாக்கம் அருகே உள்ள அங்காளம்மன் கோவிலில் திருமணம் செய்துள்ளனர். பின், அச்சிறுபாக்கம் அருகே அமணம்பாக்கம் கிராமத்தில், தனியாக வீடு எடுத்து தங்கினர்.
இந்நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி, மதுராந்தகம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
பின், நேற்று மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பின், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து, பிரகாஷிடம் விசாரித்து வருகின்றனர்.