/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : பிப் 10, 2025 01:54 AM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம் மொறப்பாக்கத்தில், பழமையான பொன்னியம்மன் மற்றும் மங்களாம்பிகை தாயார் உடனுறை திருசோளீஸ்வரர் கோவில் உள்ளது.
கோவில் புனரமைப்பு பணிகள் செய்ய ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்கள் முடிவெடுத்து, பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் முடிவுற்று நேற்று முன்தினம், கும்பாபிஷேக பணிகளுக்காக பந்தக்கால் நடப்பட்டது.
முதல் கால பூஜையுடன் மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, நவகிரக பூஜை, தனபூஜையுடன், கணபதி ஹோமம், கோ பூஜையுடன் விழா தொடங்கியது.
பின், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.
நேற்று, நான்காம் கால யாக சாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு வரப்பட்டது.
காலை 9:00 - 10:30 மணிக்குள், மேள தாளங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பின், கோபுர கலசத்திற்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், விழா குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
பின், மொறப்பாக்கம் பகுதியில் இருந்து பொன்னியம்மனுக்கு, தாய் வீட்டு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது.

