/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்தலசயனர் கோவிலில் பிரசாத கடை ஏலம்
/
ஸ்தலசயனர் கோவிலில் பிரசாத கடை ஏலம்
ADDED : ஆக 27, 2024 01:05 AM
மாமல்லபுரம்: ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. புளியோதரை, லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை கடை உள்ளிட்ட கடைகளுக்கான குத்தகை உரிம ஏலம், நேற்று நடத்தப்பட்டது.
இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:
பிரசாத விற்பனை கடை ஏலத்தில், இரண்டு பேர் பங்கேற்றனர். 2.01 லட்சம் ரூபாய்க்கு, பிரசாத கடை ஏலம் விடப்பட்டது. தேங்காய், பழம் விற்பனை கடை ஏலத்தில், இரண்டு பேர் பங்கேற்று, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
சுவாமியர் படங்கள் விற்பனை கடை ஏலத்தில், இரண்டு பேர் பங்கேற்று, 68,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆக., 22ம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, கடைகள் நடத்த உரிமம் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.