/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் நிறுவன மேலாளர் மர்ம முறையில் உயிரிழப்பு
/
தனியார் நிறுவன மேலாளர் மர்ம முறையில் உயிரிழப்பு
ADDED : செப் 14, 2024 08:09 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுஷாந்த் பால்சேகர், 45, இவர், ஒரகடம் தனியார் நிறுவன பொது மேலாளராக இருந்து வந்தார்.
இவரது குடும்பத்தினர், மும்பையில் வசித்து வருகின்றனர். சுஷாந்த் பால்சேகர் நேற்று முன்தினம் வேலைக்கு வருவதாக நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்திருந்தார்.
ஆனால், வேலைக்கு செல்லவில்லை. அதன்பின், நிறுவனத்தினர் மொபைல்போன் வாயிலாக தொடர்பு கொண்ட போது, சுஷாந்த் பால்சேகர் அழைப்பை ஏற்கவில்லை.
பின், அதே குடியிருப்பில் வசிக்கும், சக ஊழியரான பிரபால் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் சென்று பார்த்த போது, சுஷாந்த் மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.