/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூடி இல்லாத பொது கிணறு திருமணியில் சுகாதார சீர்கேடு
/
மூடி இல்லாத பொது கிணறு திருமணியில் சுகாதார சீர்கேடு
மூடி இல்லாத பொது கிணறு திருமணியில் சுகாதார சீர்கேடு
மூடி இல்லாத பொது கிணறு திருமணியில் சுகாதார சீர்கேடு
ADDED : ஜூலை 04, 2024 12:31 AM

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திருமணி ஊராட்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த குடியிருப்புகளுக்கு, திருமணி பகுதியில் உள்ள ஏரியில் இரண்டு பொது கிணறுகள் அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து மோட்டார் வாயிலாக மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த இரண்டு கிணறு களில், ஒரு கிணற்றில் சிமென்ட் 'கான்கிரீட்' மூடி அமைக்கப்பட்டு உள்ளது.
மற்றொரு கிணற்றில் இருந்த இரும்பு தடுப்பு வேலி, கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்தது.
தற்போது கிணறு திறந்தவெளியில் உள்ளதால், இந்த பகுதியில் இரவு நேரங்களில் மது அருந்துவோர் காலி பாட்டில் களை கிணற்றில் வீசிசெல்கின்றனர்.
எனவே, இந்த கிணற்றில் மீண்டும் இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.