/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
/
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
ADDED : ஆக 30, 2024 12:28 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று வெளியிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் - தனி, செய்யூர் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அருண்ராஜ் வெளியிட, சப்- - கலெக்டர் நாராயணசர்மா பெற்றுக்கொண்டார்.
இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கரன் மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

