/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் மழைநீர் கால்வாய் துார் வாரும் பணிகள் துவக்கம்
/
செங்கையில் மழைநீர் கால்வாய் துார் வாரும் பணிகள் துவக்கம்
செங்கையில் மழைநீர் கால்வாய் துார் வாரும் பணிகள் துவக்கம்
செங்கையில் மழைநீர் கால்வாய் துார் வாரும் பணிகள் துவக்கம்
ADDED : செப் 17, 2024 11:34 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் கால்வாய்கள் உள்ளன.
இந்த கால்வாய்களை, வடகிழக்கு பருவமழைக்கு முன் துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய, நகராட்சி பொது நிதியில், 3.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிக்கு, கடந்த 10ம் தேதி டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக துார் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மழைநீர் கால்வாய் துார் வாரி எடுக்கப்படும் மண், அங்கிருந்து அகற்றப்படாமல், கால்வாய் பகுதியிலேயே கொட்டப்படுகிறது.
இதனால், திடீரென மழை பெய்தால், துார் வாரிய மண் மீண்டும் கால்வாயில் சேர்ந்து, கால்வாய் துார்ந்துவிடும். எனவே, கால்வாயில் துார் வாரிய மண்ணை அப்புறப்படுத்தி, வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.