/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு கலை கல்லுாரியில் கூடுதல் 'சீட்' ஒதுக்க வேண்டுகோள்
/
செங்கை அரசு கலை கல்லுாரியில் கூடுதல் 'சீட்' ஒதுக்க வேண்டுகோள்
செங்கை அரசு கலை கல்லுாரியில் கூடுதல் 'சீட்' ஒதுக்க வேண்டுகோள்
செங்கை அரசு கலை கல்லுாரியில் கூடுதல் 'சீட்' ஒதுக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 14, 2024 12:11 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ராட்டினம்கிணறு பகுதியில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது.
இங்கு, இளங்கலை தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், வணிகவியல், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட, 17 துறைகள் உள்ளன.
மதுராந்தகம், திருப்போரூர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மாணவ -- மாணவியர் இங்கு பயில்கின்றனர்.
இக்கல்லுாரியில், சேர்க்கைக்காக ஆன்-லைன் முறையில், மாணவ -- மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்றது.
கடந்த 10ம் தேதி, பி.எஸ்.சி., மற்றும் பி.சி.ஏ., பாடப்பிரிவுகளுக்கும், 11ம் தேதி பி.காம்., மற்றும் பி.பி.ஏ., பாடப் பிரிவுகளுக்கும் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.
நேற்று காலை, பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கில பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கல்லுாரியில், பி.ஏ., தமிழ் பிரிவில், மொத்தம் 70 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், 3,688 மாணவ- - மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர்.
நேற்று நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வில், 63 இடங்கள் பூர்த்தியாகி விட்டன. எஞ்சிய 7 இடங்கள் மட்டுமே உள்ளன.
எனவே, 3600 பேருக்கு மேல் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நிலையில், 88 மதிப்பெண்ணோடு 70 இடங்களும் முடிந்துவிடுவதால், இடம் கிடைக்காத மாணவர்களும், பெற்றோர்களும் கலங்கிச் செல்கின்றனர். இந்நிலையே, மற்ற பாடங்களுக்கும் உள்ளது.
எனவே, தமிழக அரசு கல்லுாரிகளில், இடங்களை அதிகப்படுத்துவதோடு, அரசுக் கல்லுாரிகளையும் அதிகப்படுத்த வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.