/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேவதிபுரத்தில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க கோரிக்கை
/
ரேவதிபுரத்தில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க கோரிக்கை
ரேவதிபுரத்தில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க கோரிக்கை
ரேவதிபுரத்தில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 11, 2024 02:27 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, ரேவதிபுரம் ஆறாவது குறுக்குத் தெரு மற்றும் சுலோச்சனா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில், கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் தேங்கி, இப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
எங்கள் பகுதிக்கு, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லை. இதனால், இப்பகுதியில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், மழைநீர் தெருக்களில் தேங்கி பாதிக்கப்படுகின்றனர்.
கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய்கள் வருகின்றன. இது குறித்து, ஊரப்பாக்கம் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், தற்போது சில நாட்களுக்கு முன் பெய்த ஒருநாள் மழைக்கே, தெருவில் மழைநீர் அதிக அளவில் தேங்கி, பள்ளி செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்லும் பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றோம்.
எனவே, எங்கள் பகுதிக்கு, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.