/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எஸ்கலேட்டர் நடைபாதை மேம்பாலம் சிங்கபெருமாள் கோவிலில் கோரிக்கை
/
எஸ்கலேட்டர் நடைபாதை மேம்பாலம் சிங்கபெருமாள் கோவிலில் கோரிக்கை
எஸ்கலேட்டர் நடைபாதை மேம்பாலம் சிங்கபெருமாள் கோவிலில் கோரிக்கை
எஸ்கலேட்டர் நடைபாதை மேம்பாலம் சிங்கபெருமாள் கோவிலில் கோரிக்கை
ADDED : ஆக 21, 2024 09:04 AM
மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000ரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 200க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன.
சுற்றியுள்ள செட்டிப்புண்ணியம், கொளத்துார், அனுமந்தபுரம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, இங்கு வந்து செல்கின்றனர்.
இங்கு, ஜி.எஸ்.டி., சாலை பகுதியில், பாதசாரிகள் கடந்து செல்ல நடைபாதை மேம்பாலம் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி - மகேந்திரா சிட்டி வரை, கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சாலையில், அனுமந்தபுரம் சாலை சந்திப்பை கடந்து, பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவில், அரசினர் மேல்நிலைப்பள்ளி, தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை உள்ளன. இங்கு செல்வோர் சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின், 100 அடி அகலமாக சாலை உருவானதால், முதியவர்கள், பெண்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர்.
எனவே, இந்த பகுதியில் தானியங்கி நடைபாதை மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.