/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொது கிணறு தண்ணீரை சுத்திகரித்து வினியோகம் செய்ய வேண்டுகோள்
/
பொது கிணறு தண்ணீரை சுத்திகரித்து வினியோகம் செய்ய வேண்டுகோள்
பொது கிணறு தண்ணீரை சுத்திகரித்து வினியோகம் செய்ய வேண்டுகோள்
பொது கிணறு தண்ணீரை சுத்திகரித்து வினியோகம் செய்ய வேண்டுகோள்
ADDED : மே 11, 2024 12:59 AM

சேலையூர்:சேலையூரை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், தண்ணீர் பிரச்னையை சரிசெய்ய, பயன்படாமல் உள்ள பொது கிணற்று தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, வினியோகம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. இவ்வூராட்சியில், கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக, தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து, அச்சங்கத்தினர் கூறியதாவது:
வேங்கைவாசல் ஊராட்சியில், வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் வரும் தண்ணீர், தற்போது குறைந்து விட்டது.
அதேபோல், மெதுவாகவே வருகிறது. இப்படியே போனால், இன்னும் சில வாரங்களில் பிரச்னை அதிகமாகிவிடும். இது குறித்து கேட்டால், மோட்டார் பழுதடைந்து விட்டதாக, அதிகாரிகள் அலட்சியமாக கூறுகின்றனர்.
வேங்கைவாசல் பெரிய ஏரியில், 2019ம் ஆண்டு பொது கிணறு ஒன்று தோண்டப்பட்டு, கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டது. அந்த கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து, தொட்டியில் நிரப்பி, பொதுமக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்து வந்தனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு, அந்த கிணற்றில் இருந்து தண்ணீரை எடுப்பதை நிறுத்தி விட்டனர். கேட்டால், தண்ணீர் நன்றாக இல்லை எனக் கூறுகின்றனர்.
அதேபோல், வேங்கைவாசல் மெயின் ரோட்டில், கடந்த ஆண்டு, பொது கிணறு தோண்டி, பாதியிலேயே விட்டு விட்டனர்.
இந்த கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு வினியோகம் செய்தால், தண்ணீர் பிரச்னை ஏற்படாமல் தடுக்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.