/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுதல் குடிநீர் கிணறு அமைக்க ஆண்டார்குப்பத்தில் கோரிக்கை
/
கூடுதல் குடிநீர் கிணறு அமைக்க ஆண்டார்குப்பத்தில் கோரிக்கை
கூடுதல் குடிநீர் கிணறு அமைக்க ஆண்டார்குப்பத்தில் கோரிக்கை
கூடுதல் குடிநீர் கிணறு அமைக்க ஆண்டார்குப்பத்தில் கோரிக்கை
ADDED : ஏப் 22, 2024 05:59 AM
சித்தாமூர், : சூணாம்பேடு அருகே வன்னியநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டார்குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி எதிரே உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மேல்நிலைத் தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, 150 தெருக் குழாய்கள் வாயிலாக வினியோகம் செய்யப்படுகிறது. மழைக் காலத்தில் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய போதிய அளவு கிணற்றில் தண்ணீர் உள்ளது. ஆனால், கோடைக் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க, ஏரிக்கரையில் புதிய கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆண்டார்குப்பம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.