/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊராட்சி மன்ற பழைய கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை
/
ஊராட்சி மன்ற பழைய கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை
ADDED : மார் 08, 2025 11:31 PM

மதுராந்தகம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, குமாரவாடி ஊராட்சி உள்ளது.
இங்கு, 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அருகே, ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக, கட்டடம் பயன்பாடு இல்லாமல், இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இதையடுத்து, புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
பழைய கட்டடம் உள்ள பகுதியைக் கடந்து, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு மாணவர்கள் நடந்து செல்கின்றனர். நாள்தோறும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
எனவே, பயன்பாடு இல்லாமல் ஆபத்தான நிலையிலுள்ள, பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.