/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளர் சுடுகாடு ஆக்கிரமிப்பு மீட்டுத்தர கோரிக்கை
/
இருளர் சுடுகாடு ஆக்கிரமிப்பு மீட்டுத்தர கோரிக்கை
ADDED : ஆக 02, 2024 01:58 AM
மறைமலை நகர்:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் அன்பரசன், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனு விபரம்:
வெங்கடாபுரம் ஊராட்சி, தெள்ளிமேடு கிராமத்தில், இருளர்களுக்கு சொந்தமான இடுகாடு மற்றும் சுடுகாடு, 52 சென்ட் அளவில் உள்ளது. இந்த நிலத்தை தனி நபர் ஒருவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து, தோட்டம் அமைத்துள்ளார்.
அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து, தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.