/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுார் -- வண்டலுார் இடையே நிழற்குடை அமைக்க கோரிக்கை
/
பரனுார் -- வண்டலுார் இடையே நிழற்குடை அமைக்க கோரிக்கை
பரனுார் -- வண்டலுார் இடையே நிழற்குடை அமைக்க கோரிக்கை
பரனுார் -- வண்டலுார் இடையே நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : மே 03, 2024 08:56 PM
செங்கல்பட்டு:சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வண்டலுார் -- பரனுார் இடையே, சாலையின் இருபுறமும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
பெருங்களத்துார் -- பரனுார் இடையிலான ஆறு வழிச்சாலையை, எட்டு வழிச்சாலையாக மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது.
அதற்கான பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து முடிந்துள்ளன. சாலை விரிவாக்கப் பணியின் போது, இடையூறாக இருப்பதாக கருதி, நிழற்குடைகள் அகற்றப்பட்டன.
அதன்பின், அனைத்து பணிகள் முடிந்த பின், பயணியர் நிழற்குடை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டது.
தொடர்ந்து, பரனுார், மகேந்திரா வேர்ல்ட் சிட்டி, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார் வரை, நிழற்குடை இல்லாததால், பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது, கோடை வெயில் கொளுத்துவதால், பேருந்து நிறுத்தங்களில், நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.