/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுகோள்
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 02, 2024 01:04 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15வது வார்டில் மேட்டு கிராமம் உள்ளது. இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள், அரிசி, பருப்பு கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்ல, 4 கி.மீ., துாரம் பயணித்து, அச்சிறுபாக்கத்தில் உள்ள நியாய விலை கடையில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இதனால், வயதானவர்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமம் அடைகின்றனர்.
மேலும், பாமாயில் மற்றும் பருப்பு உள்ளிட்டவை பற்றாக்குறை ஏற்படுவதால், மீண்டும் ஒருமுறை கடைக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, மேட்டு கிராமம் பகுதியில், பகுதி நேர நியாய விலைக் கடை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.