/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழிற்சாலையில் புகுந்த பாம்பு மீட்பு
/
தொழிற்சாலையில் புகுந்த பாம்பு மீட்பு
ADDED : செப் 05, 2024 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் என்.ஹெச்.,- 3 பகுதியில், 'பிரைட் லைட் இந்தியா பிரைவேட்' நிறுவனத்தில், நேற்று காலை நல்லபாம்பு புகுந்தது. இதைக்கண்ட தொழிலாளர்கள், அச்சமடைந்து வெளியே ஓடினர்.
இது குறித்து, மறைமலைநகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கழிப்பறை உள்ளே மறைந்திருந்த நான்கு அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை, உயிருடன் பிடித்து மறைமலை நகர் வனப்பகுதியில் விடுவித்தனர்.