/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 நாட்களாக தேங்கும் குப்பை வண்டலுார்வாசிகள் அவதி
/
10 நாட்களாக தேங்கும் குப்பை வண்டலுார்வாசிகள் அவதி
ADDED : பிப் 26, 2025 11:44 PM

வண்டலுார், வண்டலுார் ஊராட்சி முழுதும், சாலையோரம் தேங்கும் குப்பையால், பகுதிவாசிகள் முகம் சுளித்தபடி கடந்து செல்கின்றனர். குப்பையை தினமும் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள வண்டலுார் ஊராட்சி, 899.90 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இங்குள்ள 15 வார்டு தெருக்களிலும் குவிந்துள்ள குப்பை, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாமல் தேங்கி உள்ளது.
இதனால் கொசு தொல்லை, சுகாதார சீர்கேட்டால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தவிர, சாலையோரம் தேங்கி நிற்கும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மூக்கைப் பொத்தியபடி கடந்து செல்கின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
துாய்மை பணியாளர்கள் தினமும் வீடுகளுக்கு வந்து, வண்டியில் குப்பை சேகரித்துச் சென்றாலும், தெரு ஓரங்களில் குப்பை வீசுவோர் தொடர்ந்து அதே தவறை செய்கின்றனர். இவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
தவிர, ஊராட்சி முழுதும் முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வாக, துாய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

