/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
6 மாதங்களாக கிடப்பில் இருந்த சாலை பணி மீண்டும் துவக்கம்
/
6 மாதங்களாக கிடப்பில் இருந்த சாலை பணி மீண்டும் துவக்கம்
6 மாதங்களாக கிடப்பில் இருந்த சாலை பணி மீண்டும் துவக்கம்
6 மாதங்களாக கிடப்பில் இருந்த சாலை பணி மீண்டும் துவக்கம்
ADDED : மே 28, 2024 11:31 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் - -திருநிலை சாலை உள்ளது. இச்சாலை வழியாக, மானாமதி சுற்று வட்டார கிராம மக்கள், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்டபல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதில், அருங்குன்றம் - -கழினிப்பாக்கம் சாலை சேதமடைந்திருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்தது.
இதையடுத்து, அருங்குன்றம் - -கழனிப்பாக்கம் சாலை, 2.2 கி.மீ., துாரத்திற்கு முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
புதிய சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் துவங்கப் பட்டது.
இதில், சிறுபாலம் அமைக்கும் பணி முடிந்து, சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. ஆனால், ஆறு மாதங்கள் ஆன நிலையில், ஜல்லிக் கற்கள் மீது தார் ஊற்றி சாலை அமைக்காமல் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, கடந்த 26ம் தேதி, நம்நாளிதழில் படத்துடன்செய்தி வெளியானது. இதன் விளைவாக, நேற்று சாலை அமைக்கும் பணி மீண்டும் துவங்கி நடைபெற்றுவருகிறது.