/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
/
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 21, 2024 01:16 AM
மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் அடுத்த மருதேரி ஏரியில், மாவட்ட நிர்வாகம் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இந்த ஏரியில், தினமும் 800க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கப்பட்டு, சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
அனுமந்தபுரம் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, மருதேரி -- சிங்கபெருமாள் கோவில் சாலை வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன.
இந்த லாரிகள், முழுதும் மண் நிரப்பிக்கொண்டு, தார்ப்பாய் மூடாமல் வேகமாக செல்கின்றன. இதனால், இந்த சாலைகளில் மணல் புழுதி காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த ஏரியில் மண் எடுக்க துவங்கியதில் இருந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
இந்த தடங்களில் அதிக அளவில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
லாரிகள் தார்ப்பாய் மூடாமல் வேகமாக செல்வதால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமமாக உள்ளது.
எனவே, இந்த லாரிகளில் தார்ப்பாய் மூடி, பாதுகாப்புடனும் முறையாகவும் மண் எடுத்துச் செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.