/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் சாலை விபத்து அடுத்தடுத்து மோதி கார்கள் சேதம்
/
கூடுவாஞ்சேரியில் சாலை விபத்து அடுத்தடுத்து மோதி கார்கள் சேதம்
கூடுவாஞ்சேரியில் சாலை விபத்து அடுத்தடுத்து மோதி கார்கள் சேதம்
கூடுவாஞ்சேரியில் சாலை விபத்து அடுத்தடுத்து மோதி கார்கள் சேதம்
ADDED : ஆக 06, 2024 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி மின் வாரிய அலுவலகம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கனரக வாகனம், முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது, கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து, பின் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதின. இதில் இரண்டு கார்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தால், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி.,சாலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டது.
கூடுவாஞ்சேரி போக்கு வரத்து புலனாய்வுபோலீசார் விரைந்து வந்து,போக்குவரத்தை சீரமைத்துவிபத்து தொடர்பாக, வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.